கேரளாவிற்கு ரயில் மூலம் ஹவாலா பணம் : ரூ.4 கோடி மதிப்பு பணம், தங்கம் பிடிபட்டது
கேரளாவிற்கு ரயில் மூலம் ஹவாலா பணம் : ரூ.4 கோடி மதிப்பு பணம், தங்கம் பிடிபட்டது
கேரளாவிற்கு ரயில் மூலம் ஹவாலா பணம் : ரூ.4 கோடி மதிப்பு பணம், தங்கம் பிடிபட்டது
சென்னை : சென்னையில் ரயில் பயணிகளிடம் இருந்து நான்கு கோடி ரூபாய் மதிப்பு பணம் மற்றும் தங்கத்தை மத்திய அமலாக்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
இதில், சென்னையில் இருந்து கோவை மற்றும் கேரளாவிற்கு செல்லவிருந்த மூன்று பயணிகளிடம் நடத்தப்பட்ட தீவிர சோதனையில் 1.55 கோடி ரூபாய் ஹவாலா பணம், 2.55 கோடி ரூபாய் மதிப்பிலான 15 கிலோ தங்கக் கட்டிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, ஹவாலா பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட திருவல்லிக்கேணியை சேர்ந்த முக்கிய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த ஓராண்டாக ஹவாலா தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், இதன் மூலம் தினம் இரண்டு கோடி ரூபாய் வரையில் பட்டுவாடா நடந்ததாக தெரிவித்துள்ளார். வளைகுடா நாடுகளில் வசிப்பவர்களிடம் இருந்து பெறப்படும் உத்தரவுகளுக்கு ஏற்ப சென்னையில் தங்கக்கட்டிகள் வாங்கப்பட்டு, கேரளாவிற்கு தனிநபர்கள் மூலம் அனுப்பப்படுகின்றன.
அங்கு, இந்த தங்கக் கட்டிகள் விற்கப்பட்டு அதன் மூலம் கிடைக் கும் பணம் வெளிநாடு வாழ் இந்தியர்களாக உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. அமலாக்கப் பிரிவினால் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டதில் இது மிக அதிகபட்ச தொகை. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.